×

பழங்குடியினரின் உரிமைக்கு காங்கிரஸ் தீவிரமாக போராடும்: ஜார்க்கண்டில் ராகுல் காந்தி உறுதி

தன்பாத்: நீர்,நிலம்,காடு ஆகியவற்றில் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு காங்கிரஸ் தீவிரமாக போராடும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஜார்க்கண்டில் நேற்றுமுன்தினம் நுழைந்த ராகுல் காந்தி நேற்று 2வது நாளாக அங்கு பயணம் செய்தார். மாநிலத்தின் 13 மாவட்டங்களில் உள்ள 804 கிமீக்கு அவர் யாத்திரை செல்கிறார். தன்பாத்தில் நேற்று பேசுகையில்,‘‘பழங்குடியினர் நாட்டின் பூர்வீக குடிமக்கள். நாட்டின் நிலம், நீர் மற்றும் காடுகளை முதலில் வைத்திருந்தவர்கள். இதில் பழங்குடியினர் உரிமைக்கு காங்கிரஸ் போராடும். மாணவர்கள் கல்வி பெறவும், வேலைவாய்ப்பு பெறவும் காங்கிரஸ் பாடுபடும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளன.பொதுதுறை நிறுவனங்கள் விற்பனைைய தடுத்து இளைஞர்கள்,பழங்குடி மக்களுக்கு நியாயம் கிடைத்திட யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார். காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் பேசுகையில்,‘‘70 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கின்றனர். ஜார்க்கண்டின் பிலாய், ரூர்க்கேலா, துர்காப்பூர், பக்ராநங்கல், பொக்காரோ,தன்பாத்,பரவுனி,சிந்த்ரி ஆகிய நகரங்கள் ஜவகர்லால் நேரு காலத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த நகரங்கள் தொழில்துறை வளர்ச்சியின் அடையாளங்கள் ஆகும்’’ என்றார்.

 

The post பழங்குடியினரின் உரிமைக்கு காங்கிரஸ் தீவிரமாக போராடும்: ஜார்க்கண்டில் ராகுல் காந்தி உறுதி appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul Gandhi ,Jharkhand Dhanbad ,president ,India ,Jharkhand ,
× RELATED மகாலட்சுமி யோஜனா ஏழைக்...